தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-கைச்சிலம்பாட்டம்

  • கைச்சிலம்பாட்டம்

    பரல்கள் நிரப்பப்பட்ட வெண்கலத்தினாலான     சிலம்புகளை
    இருகைகளிலும் பிடித்துக்கொண்டு பம்பை என்ற இசைக்கருவியின்
    இசைப்பு முறைக்கேற்பப் பாடலுடன் ஆடப்படும் ஆட்டம்
    கைச்சிலம்பாட்டம் ஆகும். இரண்டு பேர் அல்லது நான்குபேர்
    இணைந்து இவ்ஆட்டத்தை ஆடுவர். பனியனும் அரைக்கால்
    சட்டையும் அணிந்து கொண்டு வட்டமாகவும் குதித்தும் அமர்ந்து
    எழுந்தும் ஆட்டம் விறுவிறுப்பாக ஆடப்படும்.

    வடஆர்க்காடு, தென்ஆர்க்காடு, தருமபுரி,     செங்கல்பட்டு
    மாவட்டங்களில் நடைபெறும் அம்மன் விழாக்களில் கைச்சிலம்பாட்டம்
    நிகழ்த்தப்படுகின்றது. பாடல், இசை, ஆட்டம் என்று மாறிமாறி
    இக்கூத்து நிகழ்த்தப்படும். தெய்வங்கள் தொடர்பான கதைப் பாடல்கள்
    மிகுதியாக இடம்பெறுகின்றன. கோயிலின் முன்பாக விடியவிடிய
    ஆட்டம், நிகழ்த்திக் காட்டப்படுகின்றது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:45:38(இந்திய நேரம்)