Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. குயிலின் முற்பிறவியில் நிகழ்ந்தது யாது?
குயில் முற்பிறவியில் சின்னக்குயிலி என்ற சேரநாட்டு வேடர்குலப் பெண்ணாய்ப் பிறந்திருந்தாள். தன் மாமன் மகள் மாடனையும், தனக்காக மணம் நிச்சயிக்கப்ட்ட நெட்டைக் குரங்கன் என்பானையும் புறக்கணித்துவிட்டு, சேர இளவரசன் மேல் காதல் கொண்டாள். மாடனும் குரங்கனும் சேர இளவரசனை வெட்டி வீழ்த்தினர். இளவரசன் மறுபிறப்பில் குயிலியை மணப்பதாகக் கூறி இறந்து விட்டான்.