தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

C0122210.htm-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    உலக வாழ்க்கை என்பது சமுதாய அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. சமுதாயம் என்பது மக்கள் தொகுதி. இந்த மக்கள் தொகுதியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன இயல்பைக் கொண்டவர்களாக இருப்பது இயல்பு. அவரவர் மனநிலைக்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும்.

    மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுவில் நன்மை தரக்கூடியவையாக இருத்தல் வேண்டும். அவ்வாறு பொது நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு மட்டும்’ என்னும் தன்னல நோக்கம் கொண்டதாகச் செயல்பாடு இருந்தால் அந்தச் சமுதாய அமைப்பில் சிக்கல்கள் எழும்.

    அவ்வாறு சிக்கல்கள் எழாமல் சமுதாயம் சீராகச் செயல்படுவதற்குச் சில பொதுவான அறங்களை முன்னோர்கள் உருவாக்கியுள்ளார்கள். அந்த அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

     
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:15:45(இந்திய நேரம்)