Primary tabs
-
1.1 பிற்கால அறநூல்கள்
தமிழில் தோன்றிய அறநூல்கள் பல. அவற்றில் ‘பதினெண்கீழ்க் கணக்கு’ என்னும் தொகுதியில் பதினோர் அறநூல்கள் உள்ளன. அவற்றை இதற்கு முந்தைய தொகுதியில் நீங்கள் படித்திருப்பீர்கள். இத்தொகுதியில் பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறாத பிற்கால அறநூல்கள் இடம்பெறுகின்றன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பின்னர்த் தோன்றிய அறநூல்கள் பின்வருமாறு.
1.ஆத்திசூடி2.கொன்றை வேந்தன்3.மூதுரை (வாக்குண்டாம்)4.நல்வழி5.வெற்றிவேற்கை (நறுந்தொகை)6.உலகநீதி7.நீதிவெண்பா8.நீதிநெறிவிளக்கம்9.நன்னெறி10.அருங்கலச்செப்பு11.அறநெறிச்சாரம்12.கபிலர் அகவல்13.நீதிச் சதகங்கள்14.நீதி சிந்தாமணி15.நீதிநூல்16.பெண்மதிமாலை17.அறநூல்18.பாரதியாரின் புதிய ஆத்திசூடி19.பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி20.பாரதிதாசனின் இளையோர் ஆத்திசூடிமுதலியவை ஆகும்.