தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 6.9 தொகுப்புரை

    இதுகாறும் கீழே குறிப்பிடப்பட்டவை விளக்கப்பட்டன.

    (அ)
    நொச்சி, எயில் காத்தல் ஆகும். இது எயில்போரின் பின் நிகழ்வு. உழிஞை, எயில் வளைத்தல் அஃதாவது, முற்றுகையிடல். இது முன்னிகழ்வு. எனினும், புறப்பொருள் வெண்பாமாலையில் நொச்சிக்குப் பின்னரே உழிஞை வைக்கப்பட்டிருக்கின்றது .
    (ஆ)
    உழிஞை மருதத்தின் புறன். தொல்காப்பியர் நொச்சியை உழிஞையின் மறுதலையாகக் கருதுகின்றார். எனவே இத்திணைகள் இரண்டும் மருதத்தின் புறனாகும்.
    (இ)

    நொச்சித் திணையின் துறைகள் எட்டு. உழிஞையின் துறைகள் இருபத்து எட்டு. துறைகள் ஒவ்வொன்றும் அவ்வப் பெயர்களைப் பெற்றமைக்கான காரணங்கள், துறைப்பொருளை விளக்க வரும் வெண்பாக்களின் செய்திகள், அச்செய்திகள் கொளுக்களின் பொருள்களைக் கொண்டிருத்தல், துறையமைதி ஆகியவை வரிசையாக இடம் பெற்றன.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - Il
    1.
      உழிஞைக் கொடியின் இக்காலப் பெயர் என்ன?
    2.
    உழிஞைப் போரின் வேறு பெயர் என்ன?
    3.
      உழிஞை எந்த அகத்திணையின் புறன்?
    4.
      உழிஞை ஒழுக்கம் - விளக்குக.
    5.
      உழிஞைத் துறைகள் எத்தனை?
    6.
    உழிஞை மன்னன் எத்தெய்வங்களையொப்ப எண்ணப் பெறுகின்றான்?
    7.
    உழிஞையின் ‘புறத்திறை’ எங்கே தங்கியதைச் சொல்கின்றது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 18:39:10(இந்திய நேரம்)