தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04142-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

        இப்பாடம் கூட்டொலி என்றால் என்ன? என்பதை விளக்குகிறது. ஐ, ஒள என்னும் இரண்டு உயிர் ஒலிகள் கூட்டொலிகளாகத் தமிழிலும், வடமொழியிலும் கருதப்படுவதைக் குறிப்பிடுகிறது. வடமொழியில் இவை எந்த ஒலிகளின் கூட்டால் உருவாயின என்பதை விளக்குகிறது. தமிழில் இவை எந்த ஒலிகளின் கூட்டால் உருவாயின என்பது பற்றி இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. எனவே அவ்விரு வேறுபட்ட கருத்துகளையும் விளக்கிக் காட்டுகிறது. மேலும் அவ்விரு கருத்துகளில் எது பொருந்துவதாக உள்ளது என்பதை மொழியியல் கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டி விளக்குகிறது. சங்க காலம், இடைக்காலம், தற்காலம் எனக் காலந்தோறும் ஐ, ஒள என்னும் இரண்டும் எவ்வாறு எழுதப்பட்டும், ஒலிக்கப்பட்டும் வந்தன என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது. தமிழில் இவ்விரண்டு கூட்டொலிகளின் வருகை சொற்களில் எவ்வாறு அமைந்துள்ளது     என்பதையும் சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:29:39(இந்திய நேரம்)