Primary tabs
-
5.6 சித்தர் பாடல்களில் சந்தம்
சித்தர் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற மக்களால் இம்மெட்டுக்களில் பாக்கள் படைக்கப்பட்டு வருகின்றன. சித்தர் பாடல்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. எளிமை, இனிமை, தெளிவு, ஆழம் கொண்ட பாடல்களாக உள்ளன. பிற்காலப் படைப்புகளில் இப்பாடல்களின் இசை மெட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.5.6.1 யாப்பு வடிவங்கள்
சித்தர் பாடல்களில் அமையும் யாப்பு வடிவங்களை நான்கு நிலைகளில் காணலாம்.
1) வழிவழி வந்த செய்யுள் மரபின 2) சிற்றிலக்கியச் சந்த மரபின
3) இசைப்பா வடிவில் அமைவன 4) விளிப்பாடல் வடிவின
1) வழிவழி வந்த செய்யுள் மரபின
வழிவழி வந்த செய்யுள் மரபின் அடிப்படையில் சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன. ஆசிரியம், கலி, விருத்தம் என்ற யாப்படிப்படையில் அமைந்துள்ளன. நல்ல சொற்செட்டுகள் கொண்ட இனிமையான எளிமையான சந்த வடிவுடன் உள்ளன. கருவூர், திருமாளிகைத் ே்தவர், பட்டினத்தடிகள், சிவவாக்கியர் பாடல்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ -சிவவாக்கியார்தன்ன தன்ன தன்ன தன்ன தன்னதன்ன தானனே என்ற இசைமெட்டின் அடிப்படையில் இப்பாடல் அமைந்துள்ளது.
2) சிற்றிலக்கியச் சந்த வகை
சிற்றிலக்கியப் பாடல்கள் சந்தக் கவிதைகளாக உள்ளன. இசைப் பாடல்களில் சிற்றிலக்கியச் சந்த வகைகள் காணப்படுகின்றன.
பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகங்களில் பயன்படுத்தப்படும் காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, ஆனந்தக்களிப்பு, கண்ணிப் பாடல்களின் சந்தமெட்டு அடிப்படையில் சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் ஆனந்தக் களிப்பு என்ற இசைமெட்டு வகையைக் கடுவெளிச் சித்தர் பாடல்களில் காண்கிறோம். இதனைப் பாரதியும், பிற்காலப் புலவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.தந்தன தானன தானே - தன
தந்தன தானன தானன - தானேஆனந்தக் களிப்பு - கடுவெளிச் சித்தர்
நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத் தாண்டிஎன்ற சந்த மெட்டில் அமைந்துள்ளது.
3) இசைப்பா வடிவில் அமைவன
இசைப்பா வடிவில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு அடிப்படையாலும், கும்மி, கண்ணி என்ற வடிவாலும் சித்தர் பாடல்களில் இசைச் சந்த மெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால இசைப்பாக்களுக்கு இவை துணை புரிந்துள்ளன. கீர்த்தனை என்ற இசைப்பா வடிவம் இன்று பெரு வழக்கில் உள்ளது. புகழ்பாடும் இசைப்பாவாக எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற முக்கூறுகளைக் கொண்டு இது அமையும்.
தரவு, தாழிசை, சுரிதகம் என்ற நிலைகளின் வளர்ச்சியாக இது அமைந்துள்ளது.
கடுவெளிச் சித்தர் பாடல்கள் எடுப்பு, தொடுப்பு என்ற நிலையில் அமைந்துள்ளன.
எடுப்புபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்தொடுப்பு
பாரிலு யர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்திசீரில் உயர் சித்தி - யார்க்கும்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்திகும்மி என்ற அருமையான இசை மெட்டில் கொங்கணச்சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் இராமலிங்க அடிகளார், பாரதி, பாரதிதாசன் போன்றோர் இம்மெட்டில் பாடல்களைப் படைத்துள்ளனர்.
ஊமை யெழுத்தே யுடலாச்சு - மற்றும்
ஓமென் றெழுத்தே உயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டுவிளை
யாடிக் கும்மி யடியுங்கடி-
விளிப்பாடல் வடிவில்
முன்னிலையில் ஒருவரை விளித்துப் பாடும் நிலையில் இனிமையான சந்தப்பாக்கள் சித்தர் பாடல்களில் உள்ளன.
கண்ணம்மாவை முன்னிலைப்படுத்தி அழுகணி சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன.வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததா
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோதாண்டவக்கோனை முன்னிலைப்படுத்தி இடைக்காட்டுச் சித்தர் பாடியுள்ளார்.
தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி தீந்தக்கோ னாரே
ஆநந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரேகுதம்பாய் என்ற பெண்ணை விளித்துக் குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடிஇவ்வாறு சந்தமார் இன் கவிகளாகக் குதம்பைச் சித்தர் பாடல்கள் விளங்குகின்றன.
-