Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சமூக நாடகங்களின் வரலாறு, விலாச நாடகங்கள், முன்னோடிகளின் நாடக முயற்சிகள், தேசிய நாடகங்கள், திராவிட இயக்க நாடகங்கள், சமூக உணர்வு நாடகங்கள், நவீன நாடகங்கள் முதலானவை பற்றிச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
சமூக நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி முதலானவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் திராவிட இயக்க வளர்ச்சிக்கும் நாடகங்கள் உதவிய தன்மையை அறிந்து கொள்ளலாம்.
குடும்பம், அலுவலகம், அரசியல், பொருளியல் நிலை, சமூக முன்னேற்றத்திற்கான கருத்துகள் முதலானவற்றை நாடகங்கள் புலப்படுத்தியதை உணர்ந்து கொள்ளலாம்.
நவீன நாடகங்களின் தோற்றத்திற்கான காரணம், அவற்றின் உள்ளடக்கங்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ளலாம்.