Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தொலைக்காட்சி நாடகங்களின் வரலாறு, பிற ஊடகங்களிலிருந்து அது வேறுபடும் தன்மை, அதன் தனித்தன்மை, தயாரிப்பு முறை, அமைப்பு முறை, நாடகக் கதைகள் முதலான செய்திகளைச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தொலைக்காட்சி நாடகங்களின் தோற்றம் வளர்ச்சி முதலானவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
தொலைக்காட்சி நாடகத்தின் இயல்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.
தொலைக்காட்சி நாடகம் பிற ஊடகங்களான வானொலி நாடகம், மேடை நாடகம், திரைப்படம் ஆகியவற்றிலிருந்து வேறுபடும் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
நாடகங்களில் அரசு தொலைக்காட்சிக்கும் தனியார் தொலைக்காட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
தொலைக்காட்சி நாடகம் வணிக சாதனமாக ஆகியிருக்கும் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
தொலைக்காட்சி நாடகத்தை விமர்சன உணர்வோடு ரசிக்கத் தெரிந்து கொள்ளலாம்.