தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10242-தெருக்கூத்து நாடகங்கள்

  • பாடம் - 2

    p10242 தெருக்கூத்து நாடகங்கள்

    E


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான தெருக்கூத்து நாடகத்தின் தோற்றம், வளர்ச்சி, நிகழ்த்து முறைகள், கதைகள், தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றிய செய்தி ஆகியவற்றைச் சொல்கிறது. தெருக்கூத்து கோயில் சடங்காக நிகழ்த்தப்படும் முறைகளைச் சொல்கிறது. தெருக்கூத்துடன் மக்களது தெய்வ நம்பிக்கை பிணைந்திருப்பதைச் சொல்கிறது. தெருக்கூத்தின் எதிர்காலம் பற்றியும் சொல்கிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    தமிழர்களின் தனிப்பெரும் கலையான தெருக்கூத்து நாடகத்தின் நுட்பங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

    தெருக்கூத்து மண்ணோடும் மக்களோடும் கொண்டிருக்கிற உறவைத் தெரிந்து கொள்ளலாம்.

    தெருக்கூத்துக் கலைஞர்கள் குறித்த செய்திகளைத் தெரிந்து      கொள்ளலாம்.

    தெருக்கூத்துக் கதைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து        கொள்ளலாம்.

    தெருக்கூத்தின் இசை, பாடல்கள், ஆடல்கள் முதலானவை குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    கட்டியங்காரன் என்ற பாத்திரத்தின் பங்களிப்பைத் தெரிந்து       கொள்ளலாம்.

    தெருக்கூத்தின் வீழ்ச்சி, தெருக்கூத்தில் செய்ய வேண்டிய         சீர்திருத்தங்கள் முதலானவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:02:10(இந்திய நேரம்)