Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
புராண நாடகங்களின் வரலாறு, முந்தைய நாடகங்கள் பற்றிய செய்தி, நாடக முன்னோடிகள் பற்றிய செய்தி, தேசிய இயக்க நாடகங்கள், திராவிட இயக்க நாடகங்கள், புராண நாடகங்களின் வகைகள் முதலான தகவல்கள் பற்றிச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
புராண நாடகங்களின் தோற்றம் வளர்ச்சி முதலானவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
புராண நாடகங்களை வளர்த்த முன்னோடிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தேசிய இயக்கத்தாரும் திராவிட இயக்கத்தாரும் புராணக் கதைகளைத் தங்கள் இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
இதிகாசங்களையும் புராணங்களையும் சமயங்களையும் சமயத் தலைவர்களையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட நாடக வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.