Primary tabs
-
5.5 தயாரிப்பாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் படைப்பு
வானொலி நாடகத் தயாரிப்பாளர்கள் தகுதியான படைப்பாளர்களை அணுகி, ஒலிபரப்ப விரும்பும் கருத்துகளுக்கு ஏற்ற நாடகங்களைப் பெற்று ஒலிபரப்புகிறார்கள். இதற்காக அவர்களிடம் படைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இவைகள் தவிர, வேறு படைப்பாளர்களும் தங்கள் படைப்புகளை அனுப்புகிறார்கள். அவற்றில் தகுதியானவற்றை நாடகத் தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுத்து ஒலிபரப்புகிறார்கள். இப்பகுதியில் நாடகத் தயாரிப்பாளர் சிலர் குறித்தும் படைப்பாளர் குறித்தும் படைப்புகள் குறித்தும் காண்போம்.
தமிழ் வானொலி நாடக வளர்ச்சிக்கு உழைத்தவர்களில் ஜி.டி. சாஸ்திரி, ஆர். பார்த்தசாரதி, எம்.எஸ். கோபால், மீ.ப. சோமசுந்தரம் (சோமு), எஸ். கந்தசாமி (துறைவன்), சுகி சுப்பிரமணியன், கே.பி. கணபதி (மாறன்), என். ராகவன், இரா.ஆறுமுகம், என்.வாசுதேவன், எம்.விசுவநாதன் (ரேடியோ அண்ணா), ஆர். அய்யாசாமி (வானொலி அண்ணா), பட்டுக்கோட்டை குமாரவேல், சக்தி மைந்தன் முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
வானொலி நாடகப் படைப்பாளர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள் குறித்த தகவல்களையும் இப்பகுதியில் காணலாம்.
ஏ.என். பெருமாள்
விடுதலைவீரன் வேலுத்தம்பி; வெற்றிக்குப் பலி; விமலனின் வீரம்; வீரத்தில் விளைந்த காதல்; பாசத்தின் எல்லை.
எம்.எஸ்.கோபால்
காற்றினிலே மிதந்த நாடகங்கள்; விளம்பரப் புலி
மனசை ப.கீரன்
தேர்க்கூட்டம்; உயிர்ப்பொம்மை; காற்றிலே கமழ்ந்தவை
பட்டுக்கோட்டை குமாரவேல்
குமாரசாமியின் குடும்பம்; கிண்கிணி மண்டபம்; குயில் தோப்பு; பொன் நகர்; மனமகிழ் மன்றம்; புதிய வேதாளம்; தேவை ஒரு மணமகன்
இ.குற்றாலம்
புதுவாழ்வு; இறைவன் தந்த பரிசு; அன்னையின் பாசம்; அன்பு நிலையம்; அண்ணன் காப்பான்; அண்ணனும் தம்பியும்; தொண்டின் பெருமை; சின்னம்மா; மன்னிப்பு; தன்மானம்.
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
நீ வந்த நேரம்; பணம் பணம் பணம்
ஆலந்தூர் கோ.மோகன ரங்கன்
பொய்யே நீ போய்விடு; பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்; வெற்றி எங்கள்கைகளில; நாங்கள் நல்லவர்கள; சவால் சம்பந்தம்; ஏமாந்தவர் யார்?
தாமரைக் கண்ணன்
கிள்ளி வளவன்; வெண்ணிலா; மருது பாண்டியர்; அலெக்ஸாண்டர்; சாணக்கிய சாம்ராஜ்யம்; கை விளக்கு; சங்கமித்திரை
பொன். பரமகுரு
வினை விதைத்தவர்கள்
க. குருநாதன்
நிலாவுக்கு பஸ்
அ. அகமது பஷீர்
சிரித்துக் கொண்டே இருப்பேன்; காலமும் கடமையும்; அண்ணனும் தங்கையும்; பங்குபோட்டுத் தின்னலாம்; தவறும் திருத்தமும்; குழந்தை நூலகம்; உதவி; புத்தக வங்கி; உதவத்தான் வேண்டும்; மறுவாழ்வு
கூத்தபிரான்
சின்னக் குருவி; சிக்குடு; கிச்சூடு
மேற்கண்டவர்கள் தவிர பி.எஸ்.ராமையா, மீ.ப.சோமு, எஸ்.கந்தசாமி (துறைவன்), சுகி.சுப்பிரமணியன், என்.ராகவன், தாமரை மணாளன், குகன், வாசவன், ஞா.மாணிக்கவாசகன், இருகூரான், லியோபிரபு, இரா.தயாநிதி, எஸ்.குலசேகரன், பி.சி.கணேசன், ஐ.ஜோசப் ஆனந்தன், அவினாசி முருகேசன், சூ.இன்னாசி, சீ.சின்னத்தம்பி, கி.கோவிந்தன், வில்லிவாக்கம் சாக்ரடீஸ் முதலானவர்களும் குறிப்பிடத் தக்க வானொலி நாடகப் படைப்பாளர்கள் எனலாம்.