தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. வள்ளுவர் கல்வியை ஏன் கண் என்று சொல்லுகிறார்?

    'கண்' என்றால், தமிழில் 'ஒளி' என்று பொருள். கல்வி எவ்வாறு
    ஒளியாக விளங்குகிறது என்பதையே வள்ளுவர் விளக்குகிறார்.

    ஒரு மனிதனுக்கு ஏனைய உறுப்புக்கள் எல்லாம் இருந்தும், கண்
    எனும் ஒரே ஒரு உறுப்பு     இல்லா விட்டாலும் அவன்
    முழுமை பெற்ற மனிதனாகக் கருதப்படமாட்டான் ஏனெனில்,
    எந்தப் பொருளையும் அவனால் பார்க்க முடியாது. இயற்கையின்
    அழகைக் கூட அவனால் ரசிக்க முடியாது. பார்ப்பதால் கிடைக்கும்
    பயனையும் காட்சியால் கிடைக்கும் இன்பத்தையும் அவனால் பெற
    முடியாது.

    அதைப்போல, கல்வி இல்லாவிட்டால், அவனால், வாழ்க்கையின்
    பயனையும், மேம்பாட்டையும், இன்பத்தையும் அடைய முடியாது.
    எனவே, கல்வியைக் 'கண்' என்று சொல்லுகிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:17:39(இந்திய நேரம்)