தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.7-தொகுப்புரை

  • 5:7 தொகுப்புரை

    கல்வி என்றால் என்ன என்று கூறிய வள்ளுவர், கல்வி எவ்வாறு
    ஓர் அழியாத செல்வமாக இருக்கிறது என்பதைக் கூறியுள்ளார்.
    கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்த, அதைக்
    கண்ணுடன் ஒப்பிட்டுச் சொல்லியுள்ளார்.

    இவ்வாறு கல்வியின் சிறப்பைச் சொல்லிய வள்ளுவர், அதை
    எவ்வாறு கற்க வேண்டும்? கற்ற வழியில் அதை எவ்வாறு
    நடைமுறைப்படுத்த வேண்டும்? கல்வியால் என்ன பயன்
    கிடைக்கும்? என்பவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகையச் சிறப்பு வாய்ந்த கல்வியைக் கற்றவர்களின்
    சிறப்புகளைக் கூறிய வள்ளுவர், கல்லாதவர் நிலையையும்
    விளக்கினார். முகத்தில் இரண்டு புண் உடையவன் என்றும்,
    விலங்குடன் ஒப்பிடத்தக்கவன் என்றும், களர் நிலத்தைப்
    போன்றவன் என்றும் குறிப்பிட்டார்.

    எனவே, இன்னமும் காலம் தாழ்த்தாமல் கல்வியைக் கற்றுக்
    கொள்ளுங்கள் என்று வள்ளுவர் வேண்டுகிறார். சாகும் வரையில்
    தொடர்ந்து கல்வியை நாடுங்கள் என்கிறார். கற்க இயலாவிட்டாலும்,
    அறிஞர்கள் கூறும் கருத்துகளை உங்கள் செவியால் கேளுங்கள்.
    ஏன் என்றால், கல்வியைப்போல், காதால் கேட்டு அறிவு
    பெறுவதும் ஒரு செல்வம் என்கிறார். இவையே இப்பாடப்பகுதியில்
    வள்ளுவர் கூறிய கருத்துகளாக இடம் பெற்றவை.

    கல்வி என்பது பற்றி வள்ளுவர் கூறிய ஒவ்வொரு கருத்தும் நாடு,
    மொழி, இனம், காலம் எனும் எல்லைகளைக் கடந்தவை.

    இவற்றை அவர் எங்கிருந்து பெற்றார்? அவர் வாழ்ந்த காலத்
    தமிழ்ச் சமுதாயத்தில் இருந்து பெற்றார். அப்படி என்றால் அந்தச்
    சமுதாயம், எந்த அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு
    சமுதாயமாக இருந்திருக்கிறது என்பது புலனாகும் அல்லவா?

    (546kb)


    தன் மதிப்பீடு: வினாக்கள் - II


    1.


    காது இருந்தும் செவிடர் எனப்படுபவர் யார்?

    2.

    கண் இருந்தும் குருடராக ஆவது யார்?

    3.

    கல்லாதவர் தம் சுற்றத்தாருக்குப் பாரமாவதைக்
    காட்டும் உதாரணத்தை விளக்குக.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:16:46(இந்திய நேரம்)