12. வள்ளல் பாரி

வள்ளல் பாரி

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தமிழை முத்தமிழ் என்று சொல்வது வழக்கம். இயல், இசை, நாடகம் என்பதே அதன் விளக்கம். அந்த வகையில் தமிழில் நாடக நூல்கள் பல தோன்றியுள்ளன. செய்யுள் வடிவில் தோன்றிய நாடகநூல் மனோன்மணீயம் ஆகும். கடல்கோள்களாலும் பிற காரணங்களாலும் பழந்தமிழ் நாடகநூல்கள் பல அழிந்து விட்டன. ஆனாலும் இன்றைக்குப் பல நாடக நூல்கள் எழுதப்பெற்று வருகின்றன. அவை பல வடிவங்களில் எழுதப்பெறுகின்றன. படிப்பதற்கு ஏற்றவகையிலும் நடிப்பதற்கு ஏற்ற வகையிலும் எழுதப்பெறுகின்றன. மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள் மேடைநாடகங்கள் ஆகும். வானொலியில் நடிக்க உதவும் வகையில் எழுதப்பெறுவன வானொலி நாடகங்கள் ஆகும். அதேபோலத் தொலைக்காட்சி நாடகங்களும் அமைகின்றன. இங்கு வள்ளல் பாரி என்ற குறுநாடகத்தை இப்போது பாடமாகப் பயில இருக்கின்றீர்கள்!