12. வள்ளல் பாரி

வள்ளல் பாரி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  செய்யுள் வடிவில் தமிழில் தோன்றிய நாடகநூல் ---------- ஆகும்.

செய்யுள் வடிவில் தமிழில் தோன்றிய நாடகநூல்மனோன்மணீயம் ஆகும்.

2.  மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள் --------- ஆகும்.

மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள்மேடை நாடகங்கள் ஆகும்.

3.  சங்க இலக்கியப் பாடல்களில் மலர்களைக் குறித்து அதிகமான பாடல்களைப் பாடியவர் --------

சங்க இலக்கியப் பாடல்களில் மலர்களைக் குறித்து அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்

4.  பறம்புமலையின் தற்காலப் பெயர் -------- ஆகும்.

பறம்புமலையின் தற்காலப் பெயர் பிரான்மலை ஆகும்

5.  வண்டு துளைத்த மூங்கிலில் புகுந்த காற்று ----------- இசையைத் தந்தது.

வண்டு துளைத்த மூங்கிலில் புகுந்த காற்று புல்லாங்குழல் இசையைத் தந்தது.

6.  பாரி வள்ளலின் நெருங்கிய நட்புடைய சங்கப்புலவர் ----------.

பாரி வள்ளலின் நெருங்கிய நட்புடைய சங்கப்புலவர் கபிலர்.

7.  இல்லையென்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவர் ----.

இல்லையென்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவர் வள்ளல்.

8.  பாரி வள்ளலின் நாட்டுக்குத் தலைநகரமாக ---------- விளங்கியது.

பாரி வள்ளலின் நாட்டுக்குத் தலைநகரமாக பறம்புமலை விளங்கியது.

9.  பாரதியின் பிறந்த நாள் பரிசாகக் கைக்குட்டையை வழங்கியத் தோழி ----.

பாரதியின் பிறந்த நாள் பரிசாகக் கைக்குட்டையை வழங்கியத் தோழி கலை

10.  ஓடியத் தேருக்கு முன்னால் ஒரு ----------- தடுமாறி விழுந்து கிடப்பதைப்போல முல்லைக் கொடி பாரிவள்ளலுக்குத் தோன்றியது.

ஓடியத் தேருக்கு முன்னால் ஒரு குழந்தை தடுமாறி விழுந்து கிடப்பதைப்போல முல்லைக் கொடி பாரிவள்ளலுக்குத் தோன்றியது.