|  தவமணி  | 
      - பாரதி இன்றைக்குப் பள்ளி முடித்துச் சீக்கிரம் வருகிறாயா?  
  | 
     
    
 
      |  பாரதி  | 
      - ஓ! வருகிறேனே. என்ன காரணம்? | 
      
    
	
      |  தவமணி  | 
      - தோட்டத்தில் வேலை இருக்கிறது பாரதி.  | 
      
    
 
      |  பாரதி  | 
      - என்ன வேலை அம்மா?  | 
      
    
	
      |  தவமணி  | 
      - நம் வீட்டில் போட்ட முல்லைக் கொடிக்குக் கொம்பு நட்டுப் பந்தல்
போடவேண்டும் என்று சொன்னேனே? | 
      
    
	 
      |  பாரதி  | 
      - அம்மா. அது இன்னும் சிறு செடியாகத்தானே இருக்கிறது? அதற்குள்
என்னம்மா அவசரம்?   
 | 
      
    
	
      |  தவமணி  | 
      - நன்றாகப் பார். இதோ அந்தச் செடியின் நுனியில் கொடிக்கான முளை
வருவதை.......   
   | 
      
    
	 
      |  பாரதி  | 
      - வரட்டுமே. இன்னும் பெரிதாக வந்தவுடன் கொம்பு நடலாமே அம்மா?  | 
      
    
	
      |  தவமணி  | 
      - பசிக்கிற நேரத்தில் உணவு உண்ணாமல் காலம் கடந்து உண்டால் என்ன ஆகும்? இது தான் சரியான பருவம் | 
      
    
	 
      |  பாரதி  | 
      -  அடுத்தவாரம் பள்ளி விடுமுறை. அந்த நாளில் பந்தல் போட்டுக்
கொள்ளலாமே அம்மா?  | 
      
    
	
      |  தவமணி  | 
      - இல்லை பாரி..... இதோ காற்று அடித்தவுடன் அந்தக் கொடி என்ன
பாடுபடுகிறது பார். முல்லைக் கொடிக்காகத் தன் தேரையே கொடுத்தான்
ஒரு மன்னன். நீ ஒரு பந்தல் போடவாவது உதவக்கூடாதா?   | 
      
    
	 
      |  பாரதி  | 
      - கொடிக்காகத் தன் தேரையே கொடுத்தானா? | 
      
    
	
      |  தவமணி  | 
      - ஆமாம். பாரதி. அப்படி நடந்த வரலாறு இருக்கிறது.   | 
	  
	  
	 
      |  பாரதி  | 
      - உண்மைதானா, அம்மா?   | 
      
    
	
      |  தவமணி  | 
      - ஆம். அந்த வரலாற்றை நான் மாலையில் சொல்லுகிறேன். முல்லைக் கொடிக்குப் பந்தல் போட்டுக்கொண்டே சொல்லலாமா?  
  | 
	  
	  
	 
      |  பாரதி  | 
      - நிச்சயமாக அம்மா. எனக்கு அந்த வரலாற்றைக் கேட்க ஆவலாக
இருக்கிறது. எனவே, எனது விளையாடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு
சீக்கிரம் வந்துவிடுகிறேன்.  | 
      
    
	
      |  தவமணி  | 
      - நல்லது பாரதி. கவனமாகச் சென்றுவா.  | 
      
    
	
      |  பாரதி  | 
      - சரி அம்மா.  |