மக்களுள் ஒருவர் |
- என்ன ஆயிற்று நம்மன்னவர் பாரிக்கு?
|
இன்னொருவர் |
- என்னவாம்? |
இன்னொருவர் |
- மலைவளம் காணச்சென்ற நம் மன்னவர் தேர் இல்லாமல் தனியே அதுவும் தெருவில் நடந்து.... |
மக்களுள் ஒருவர் |
- ஏதேனும் பழுது நேர்ந்ததா? |
இன்னொருவர் |
- அல்லது பகையாளிகள்?. |
மக்களுள் ஒருவர் |
- பறம்புநாட்டில் பகையா? இருக்காது. வேறு ஏதேனும்... |
இன்னொருவர் |
- அதோ ஒரு காவலர் ஓடி மன்னரிடம் கேட்கிறார். வாருங்கள் கவனிப்போம். |
காவலர் - 1 |
- என்னாயிற்று மன்னவா? |
பாரி |
- எல்லாம் ஒழுங்காயிற்று. இப்போதுதான் நிம்மதி. |
காவலர் - 1 |
- என்ன? என்ன? |
(சிரித்தபடி ஒன்றும் பேசாமல் பாரி மன்னன் முன்னேற அந்தக் காவலனும், அவனைப் பின்தொடர்ந்து மக்களும் நடக்கிறார்கள்? |
இன்னொருவர் |
- என்னவாம்? |
காவலர் |
- உண்மை கண்டறியச் சென்ற ஒற்றனை இன்னும் காணோமே..... |
காவலர் - 2 |
- அதோ ஓடி வருகிறான் ஒற்றன். என்னவாம் செய்தி. |
ஒற்றர் |
- வள்ளல் பாரி நம் மன்னவன் முல்லைக்கொடி படரத் தன்தேர் தந்து நடந்தே வருகின்றார் அரண்மனைக்கு. |
காவலர் - 1 |
- முல்லைக்குத் தேரா? |
மற்றொருவர் |
- இது என்னப் புதியக் கொடை? |
மக்கள் |
- முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி |
அனைவரும் |
- வாழ்க வாழ்க |
மக்கள் |
- வாடிய முல்லைக்கு ஓடிடும் தேர் தந்த நம் வள்ளல் பாரி |
அனைவரும் |
- வாழ்க வாழ்க |