12. வள்ளல் பாரி

வள்ளல் பாரி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  முத்தமிழ் விளக்கம் தருக.

இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்

2.  பாரியும் கபிலரும் கலைவிழாக் காண எங்குச் சென்றனர்?

பாரியும் கபிலரும் கலைவிழாக் காண மலைச்சரிவிற்குச் சென்றனர்.

3.  பாரி ஆண்ட மலையின் பெயர் என்ன?

பாரி ஆண்ட மலையின் பெயர் பறம்புமலை.

4.  பாரதியின் அம்மா கையில் இரத்தம் வழிவதற்கானக் காரணம் என்ன?

கழி குத்தியதால் பாரதியின் அம்மா கையில் இரத்தம் வழிந்தது.

5.  உழவர் உழவு செய்யாமல் பறம்புமலையில் விளைவன யாவை?

தேன், பலா, மூங்கில் அரிசி, வள்ளிக்கிழங்கு ஆகியன உழவர் உழவு செய்யாமல் பறம்பு மலையில் விளைவனவாகும்.

6.  பறம்புமலையின் இன்றையப் பெயர் என்ன?

பறம்புமலையின் இன்றையப் பெயர் பிரான்மலை.

7.  இல்லையென்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவர் யார்?

இல்லையென்ற வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவர் வள்ளல்.

8.  கபிலர் விறலி ஆடுவதாகப் பாரி வள்ளலுக்கு யாரைக் காட்டினார்?

கபிலர் விறலி ஆடுவதாகப் பாரி வள்ளலுக்கு மயிலைக் காட்டினார்.

9.  புத்தம் புதிய கைக்குட்டையைப் பாரதி யாருக்காக வீணாக்கினான்?

புத்தம் புதிய கைக்குட்டையைப் பாரதி தன் அம்மாவுக்காக வீணாக்கினான்.

10.  குழந்தை தடுமாறி விழுந்து கிடப்பதைப்போல எது இருந்தது?்

குழந்தை தடுமாறி விழுந்து கிடப்பதைப்போல முல்லைக் கொடி இருந்தது.