|  கபிலர்  | 
      - வருக மன்னவா.! அதோ அந்த மலைச்சரிவின் பின்னால்தான்
கலைவிழா. 
 | 
      
    
	
      |  பாரி  | 
      - எங்கே...?  
 | 
      
    
	
  
      |  கபிலர்  | 
      -  முதலில் செவி மடுங்கள். குழல் இசைக்கிறதா? 
 | 
      
    
	
      |  பாரி  | 
      - அட ஆமாம்.!  
  | 
      
    
 
      |  கபிலர்  | 
      - அப்புறம்..... முழவு..?  | 
      
    
	
      |  பாரி  | 
      - ஆமாம். நல்ல இசை. | 
      
    
 
      |  கபிலர்  | 
      - கூடவே, யாழிசை.  | 
      
    
	
      |  பாரி  | 
      - ஆமாம்... ஆமாம்.!  | 
      
    
	 
      |  கபிலர்  | 
      - கொம்பொலி...?   
  | 
      
    
	
      |  பாரி  | 
      - பொருத்தமாய் விட்டுவிட்டு ஒலிக்கிறதே. இந்த இனிய இசைக்கு நாட்டியமாடும் விறலி யாரோ?   
   | 
      
    
	 
      |  கபிலர்  | 
      - பார்க்கலாமா?  | 
      
    
	
      |  பாரி  | 
      - பார்த்துக் களிக்கும் பார்வையாளர்கள்?  | 
      
    
	 
      |  கபிலர்  | 
      -  நிறைய இருக்கிறார்கள். அவர்களைத் தொல்லைப்படுத்தாமல் நாம் பார்க்க வேண்டும்.  | 
      
    
	
      |  பாரி  | 
      - ஆமாம். மன்னரும் புலவரும் வந்தார்கள் என்று அவர்கள் கலையை மறந்து நம்மைக் கவனித்துவிடக் கூடாது இல்லையா, கபிலரே.!  | 
      
    
	 
      |  கபிலர்  | 
      - ஆமாம்... மெல்ல.. மெல்ல இந்த மலைச்சரிவைத் தொடர்ந்து வாருங்கள். 	(மெல்ல முன்னேறுகிறார்கள்) (மெல்லத் திரும்பியபின்)  | 
      
    
	
      |  பாரி  | 
      - என்ன... யாரும்...? | 
	  
	  
	 
      |  கபிலர்  | 
      - உசு..... அமைதியாய் அங்கே பாருங்கள் விறலி ஆடுகிறாள். (கபிலர் சுட்டும் திசையில் கோல மயில் ஆடிக்கொண்டிருக்கின்றாள்.) | 
      
    
	
      |  பாரி  | 
      - ஆ.. ஆமாம்.!  
  | 
	  
	  
	 
      |  கபிலர்  | 
      - இதோ பார்வையாளர்கள் தங்களுக்கு வசதியான இருக்கைகளில்... (மரக்கிளைகளில் குரங்குகள் கூட்டமாய்க் குடும்பத்துடன்) | 
      
    
	
      |  பாரி  | 
      - ((வியப்பு குன்றாமல்) அட ஆமாம்..!  
 | 
  
	 
      |  கபிலர்  | 
      - குழல் இசைப்பது அதோ அந்த நெடியவன்தான்! (சுட்டும் திசையில் மூங்கில் மரங்கள். வண்டு துளைத்த அந்த மூங்கில் துளை வழியே புகுந்தக் காற்று புல்லாங்குழல் ஒலியாக மலை எங்கும் மெல்ல எதிரொலிக்க ஒலிக்கிறது) | 
      
    
	
      |  கபிலர்  | 
      - ஓ.....!  
 | 
  
	 
      |  பாரி  | 
      - அதோ அந்தப் பாறைகளின் மீது அலைக்-கைகள்கொண்டு முழவு இசைப்பது | 
      
    
	
      |  கபிலர்  | 
      - அருவி.  
 | 
  
	 
      |  பாரி  | 
      - கொம்பொலி தருவது. | 
      
    
	
      |  கபிலர்  | 
      - மான்களின் கூட்டம்.  
 | 
  
	 
      |  பாரி  | 
      - ஓ! மலர்களைச் சூழ்ந்த வண்டுகள் இசைப்பதுதான் யாழா? இனிமை கபிலரே இனிமை. இப்படி ஓர் இசையினை நுகர்வது என் பேறுதான்.. என்ன செய்ய வேண்டும் இந்தக் கலைஞர்களுக்கு? ஏதாவது கொடுத்தாக வேண்டுமே...! | 
      
    
	
      |  கபிலர்  | 
      - வள்ளலே உமது இயல்பு இந்தக் கலைஞர்களிடம் செல்லாது.  
 | 
 
      |  பாரி  | 
      - எப்படி? | 
      
    
	
      |  கபிலர்  | 
      - இயற்கைக்குக் கொடுத்துதான் பழக்கம். உம்மைப்போலவே.  
 | 
 
      |  பாரி  | 
      - இந்தக் கலைஞர்களைப் போற்றி நான் என்னப் பரிசில் கொடுப்பது? | 
      
    
	
      |  கபிலர்  | 
      - நீ மன்னனாய் இருந்து காத்தலே பரிசுதான். இயற்கையில் வளரும்
உயிரினங்களுக்கு உனது காவல்தானே பரிசு மன்னவா!  
 | 
 
      |  பாரி  | 
      - ஆனாலும்..... |