வள்ளல் பாரி

பாடம்
Lesson


காட்சி - 2

இடம் - பாரதி வீட்டுத் தோட்டம்
இடம் பெறுவோர் - பாரதி, அவனது அம்மா தவமணி

 

(பாரதி, அவனது அம்மா தவமணி - முல்லைக் கொடிக்குப் பந்தல் நட்டுக்கொண்டே பேசிக் கொள்கிறார்கள்)

பாரதி - (அம்மா, காலையில் முல்லைக்கொடி பற்றிச் சொல்கிறேன் என்று சொன்னீர்களே....
தவமணி - (கண்டிப்பாகச் சொல்கிறேன். அதோ அந்தக் கழியை எடு...
பாரதி - இந்தாருங்கள் அம்மா.
தவமணி - பாரதி, அந்த வரலாறு நடந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
பாரதி - அவ்வளவு பழையக் கதையா?
தவமணி - ஆமாம் அப்பா, அந்தக் காலத்தில் முடிமன்னர்கள் ஆண்டக் காலம். பறம்புமலையைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு மன்னர் பறம்பு நாட்டை ஆண்டுவந்தார். அவர் பெயர் பாரி என்பதாகும். எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவதில் வள்ளலாக விளங்கியதால் அவரை வள்ளல் பாரி என்று எல்லாரும் அழைப்பது வழக்கம். அவரது இனிய நண்பராகத் திகழ்ந்தவர் கபிலர் என்னும் புலவர்.