அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

உகளுதல் ... துள்ளுதல் 87
உசா ... நுண்ணுரை நயம் 296
உணங்கல் ... வற்றல் 221, 284
உமணர் ... உப்பு வாணிகர் 227
உம்பர் ... அப்பால் 134
உம்பர் ... தேவர் 262
உரும் ... இடி 145, 175
உருமிடி ... பேரிடி 175
உவணம் ... கருடன் 162
உவவு ... முழுமதி 179
உழுவை ... புலி 241, 282
உளர்தல் ... கோதுதல் 146
உளை ... பிடரிமயிர் 74, 145, 161
உள்ளுதல் ... நினைதல் 64
உறழ்தல் ... ஒத்தல் 110
உறாலியர் ... உறற்க 196
உன்னுதல் ... நினைதல் 55