பந்தர்முல்லை அரும்பினவேற் காண்பாம்
பயம்-பயன்; நன்மை
பயிர்ப்பு-பயிலாத (பழக்கமில்லாத) பொருட்கண்
அருவருத்து நிற்கும் நிலைமை
பரதேசம்-வேற்றுநாடு
பரத்தை-புறப்பெண்டிர்
பரம்-புறம்
பரவை-பரப்பு; அகலம்
பரிசு-தன்மை
பரியம்-மணமகளுக்கு மண மகன் வீட்டார் தரும் பொருள்
பரியான்-வருந்தாதவன்
பரிவு-அன்பு
பல்லாண்டு-வாழ்த்து
பள்ளத்துவழிவெள்ளம்போல
பள்ளியம்பலம்-தூங்குமிடம்
பாசாண்டிகர்-வேதத்தை முதன்மையாகக் கொள்ளாப்
பிற சமயத்தவர்; நூல்வல்லோர்
பாந்தள்-பெரும்பாம்பு
பாவை-மக்கள் முதலிய உருவம் (பொம்மை)
பிடி-பெண்யானை
பிண்டியலர்-அசோகமலர்
பிதிரர்-பிதிர்க்கள்; தென்புலத்தார்
(‘தென்புலத்தார் தெய்வம்’ என்பது திருக்குறள்)