மாதுபடு நோக்கி-அழகு பொருந்தியகண்ணுடையவள்
மாத்திரை-அளவு
மாழை-அறிவின்மை
மாழைகலந்த ஏழைநீர்மையார்
மிகுதல்-பெருகுதல்
முகிழ் முகிழ்த்தல்-முணு முணுத்துக் கூறல்
முக்கால்-மூன்றுமுறை
முதற்பொருள்-முதன்மையான பொருள்; நிலம், பொழுது
முதனூல்-வரம்பில் அறிவன் பயந்த நூல்
முரண்-மாறுபாடு
முனிந்து-வெறுத்து
முனைவன்-கடவுள்
முன்னுறு புணர்ச்சி-இயற்கைப் புணர்ச்சி
மூக்கு ஊழ்த்தல்-கவிழ்ந்து வீழ்தல்
மூங்கை-ஊமை
மூத்திர புரீடம் - சிறுநீரும் மலமும்
மூரல் முறுவல்-புன்னகை; சிறுசிரிப்பு
மெய்ப்பாடு-புறத்தார்க்குப்
புலப்படுவதோ ராற்றான் வெளிப்படும் உடல் உணர்ச்சி
மெய்ம்மயிர் நிறுத்தி - உடல் சிலிர்த்து
மெலிது-மென்மையுடையது
மெல்லியல்-மென்மையைத் தனக்கு இயல்பாக உடையாள்