தெருளாமை-அறியாமை
தெருளும்-தெளிவான்
தெறப்படாதது-அழிக்க முடியாதது
தேவகுலம்-கோயில்
தேவர்குலம் கோயில்
தேளேறு-தேள்கொட்டுதல்
தைவந்து-தடவி
தொடுவுண்ணின் - திருடித்தின்றால். (இஃது இப்பொருள் தருதல்
‘வெண்ணெய் தொடுவுண்ட’ என்னும் திருவாய் மொழியால் அறிக.)
தோன்றல்-தலைவன்
நசை-விருப்பம்
(‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது தொல் காப்பியம்.)
நயக்கப்படும்-விரும்பப்படுகின்ற
நயப்பு-மகிழ்ச்சி
நாட்கோலம்-ஒவ்வொரு நாளும் தம்மை ஒப்பனை
செய்துகொள்ளும் அழகிய தன்மை
நாண்-பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை
நாற்றம்-நறுமணம்
நிச்சம்-எப்பொழுதும்
நிரப்பு-வறுமை; தரித்திரம்
நிலத்திரிபு-இடவேறுபாடு
நிலப்பூ-தரையிற்படர் செடி கொடிகளின் மலர்கள்