பக்கம் எண் :
 
212இறையனார் அகப்பொருள்

கைக்கிளை-ஒருதலைக்காமம் 
கைதை-தாழை 
கையாறு-செயலற்று அயர்தல்  
கையின் அகன்று 
கையுறை-கையில் கொடுக்கும் பொருள்; காணிக்கை 
கொடிப்பூ-முல்லை, மல்லிகை முதலியவற்றின் பூக்கள் 
கொட்டகாரம்-பண்டங்கள் வைக்குமிடம் 
கொத்தமுரி-கொத்தமல்லி 
கொழு-நுனி; எலும்பினது மூளைச்சத்து 
கொள்கலம்-ஏனம்; பாத்திரம் 
கொள்வோன் தன்மை- மாணாக்கனது தன்மை 
கோடல்-கொள்ளுதல்; வெண்காந்தள் 
கோடல் மரபு-நூல் பாடங்கேட்கும் முறைமை 
கோடாய்-கோள்+தாய் கொள்ளுகின்ற தாய்; அவள் செவிலித்தாய்
   (‘செல்வச்செவிலி’ என்பர் திருவள்ளுவர்) 
கோடு-விலங்கின் கொம்பு; யானைக்கொம்பு; மலைச்சிகரம் 
கோடை-வேனிற்காலம் 
கோட்டம்-குறைபாடு 
கோட்டுப்பூ-புன்னை, கோங்கு, குங்குமம் முதலியவற்றின் மலர் 
கோதை-மாலை 
கோள்-ஒரு பாட்டினகத்துப் பொருள்கொண்டு நிற்கும் நிலை

37
114
11,150
44
88
39
115
29
1,10
35
2
2,64,194
2
 
95
30,49,71
52
117
93
46
200

சூட்டுக்கத்திகை
சந்தனச்சாந்து பூசுதும் 
சந்து-ஒற்றுமை; சமாதானம் 
சமயத்தார்-மதவாதிகள் 
சமவாயம்-கூட்டம் 
சாக்காடு-சாவு; இறப்பு 
சாத்தெறிதல்-வணிகர் கூட்டத்தைக் கொல்லுதல் 
சிந்திக்கும்-எண்ணமிடுவான் 
சிலாவட்டம்-வட்டக்கல் 
சிவப்பு-சினக்குறிப்பு
சிவல்-கவுதாரி
சிறைப்புறன்-மறைவான இடம்
சீறியருளாது-சீறாது; சினங்கொள்ளாமல்
சுட்டி-கருதி
செய்குன்று-செயற்கைமலை
செலவழுங்குவித்தல்-போக்கு ஒழிவித்தல்
செலவு-செல்லுதல்
செலீஇ-செலுத்தி
செவ்வி நோக்கி-பதம்நோக்கி;  காலம் பார்த்து
சேண்-அகற்றல்

46
111
158
11
30
9,154
21
58
46
61
21
106
105
184
115
122
59
159
65
85

சொகினம்-விரிச்சி; சோதிடம்
சொல்லகில்லேம் - சொல்ல மாட்டோம்
ஞமலி-நாய்
தக்கின்று-தக்கதல்ல
தடற்றுவாள்-உறையில் உள்ள வாள்
தட்பம்-குளிர்ச்சி
தண்ணுமை-மத்தளம்
தமர்-சுற்றத்தார்
தருமம்-அறம்
தலைக்கீடு-போலிக்காரணம்; தொடக்கம்
தலைப்பெய்தல்-கூடியிருத்தல்
தலையளி-முதன்மையான அன்பு
தழைப்பொதும்பர்-செழித்த சோலை
தழை விழைதக்கன
தளிரும் முறியும் ததைந்து
தளிர்ப்ப முயங்கி-மகிழ அணைந்து
தறுகண்-அஞ்சாமை
தாமரைக்கொட்டை-தாமரைப் பொகுட்டு

193
87
101
50
15
11
175
9,26,139
173
15
48
118
46
53
44
44
31
90