ஒவ்வாப்புடை-பொருந்தாத பகுதி
ஒறுக்கும்-தண்டிக்கும்
ஒற்று-ஒற்றர்;வேற்று நாட்டில் நிகழ்வன மறைந்து
நின்றுஅறிந்துவருவோர்
ஓத்து-இயல்
ஓம்படை - பாதுகாப்பு
ஓர்ப்பு-ஆராய்ந்து உணர்தல்
ஓலுறுத்த-ஒலிசெய்ய
கடி-காவல்
கடு-கசப்பான பொருள்; அல்லது மருந்து
கடைப்பிடி-கொண்டபொருள் மறவாமை
கட்டி-வெல்லம்
கணிகையர் - பொதுமகளிர்; தாசிகள்
கண்கூடு-கண்ணுக்கு நேர்
கண்டல்-தாழை
கண்ணழித்தல்-பதப்பொருள் சொல்லுதல்
கண்ணாடிமண்டிலம்-கண்ணாடி வட்டம்
கண்ணி-தலைமாலை;நினைத்து
கண்ணி தண்ணறு நாற்றத்தன
கண்படை-உறக்கம்
கங்குல்-இரவு
கடா-கேள்வி (வினா)
கதுமென-விரைவாக
கந்தருவர்