ஈவோன் தன்மை-ஆசிரியனது தன்மை
உசாவுவாரை-வினாவுவாரை; கேட்பாரை
உடம்படுத்தல்-ஒருப்படுத்தல்
உடன்படுதல்-ஏற்றுக்கொள்ளல்
உத்தரகுரு-போகபூமி
இது மேருமலையின் வடககில் உள்ளது. இங்குக் கற்பகதரு
உண்டெனவும், தானமும் தவமும் செய்த ஆடவர், பெண்டிர்
பதினாறாண்டுப் பருவ இளைஞரும், பன்னீராண்டு இளமங்கையருமாய்
இங்குப் பிறந்து எக்காலத்தும் இன்பந்துய்ப்பர் எனவும் நூல்கள் கூறும்.
சிலப்பதிகார மனையறம் படுத்த காதை 10 ஆவது அடிக்கு அடியார்க்கு
நலல்லார், நாட்டார் விளக்க உரைக்கண் காண்க.
உய்யக் கொண்டமையின்-பிழைக்கச் செய்தலினால்
உரிமை இடம் - அந்தப்புரம்
உரும்-இடி; அச்சந்தரும் பொருள்
உருளரிசி-கொத்தமல்லி
உவகை-மகிழ்ச்சி
உழையேன்-பக்கத்துள்ளேன்; தன்மை யொருமை
உளப்பாடு-இணக்கம்
உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்
ஊர் எறிந்தன-கொள்ளையிட்ட பொருள்கள்
ஊறு-ஏதம்; துன்பம்
எச்சம்-ஒழிவு
எடுத்துக்கொண்டால்-கிடைத்ததுபோல்; திரும்பப் பெற்றால்
எண்கு-கரடி