பக்கம் எண் :
 
அருஞ்சொற்பொருள் அகரவரிசை 209
 

அருஞ்சொற்பொருள் அகரவரிசை

 

அகஇதழ் - உள்ளேடு

அக்கை - முன்பிறந்தாள

அச்சம் - குறிப்பின்றியே தோன்றும் நடுக்கம

    தான் காணப்படாத தோர் பொருள் கண்ட விடத்து அஞ்சுவது

அடியுறை - காலடியில் வைத்துக் கண்டுகோள்வது; பாதகாணிக்கை

அட்டில் - சமையலறை

அணித்து - அடுத்துள்ளது; பக்கத்திடம்

அணிமை - பக்கம்; நெருங்கின இடம்

அத்தாணி - அரசிருக்கை

அந்திவான்-மாலை நேரத்து வானம்

அம்பல்-வெளியில் பரவாதவாறு பழிதூற்றல்

       பெரும்போதாய்ச் சிறிது நிற்க அலரும்

அயர்வுயிர்ப்பு-வருத்தந்தீர்தல்

அயிர்ப்பு-ஐயம்; சந்தேகம

அரவவண்டு-ஒலி செய்கின்ற வண்டினம்

அரிமாநோக்கு-சிங்கத்தின் பார்வை

அருகும்-சார்த்தும்

46

102

147

34

46

115

45

196

172

70

116

117

144

117

46

60

82

அருங்கலம்-கிட்டுதற்குரிய அணிவகை

அருத்தம் - பொருள்

அருத்தாபத்தி - அறுவகை அளவைகளுள் ஒன்று(பகலுண்ணான்   
   பருத்திருப்பது கண்டு அவன், இரவில்      உண்பான் எனக் 
   கருதுதல்)  

அலர்-வெளியிற் பரவிய பழிச்சொல்

   தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிறகும் நி்லைமை

அலவன் - நண்டு

அவத்தம் - வீண்

அவ்வளவு - அதுவரை

அழல் - வெப்பம்

அளகம் - கூந்தல்

அறத்தொடு நிற்றல் - சிறந்தவற்றைக் கூறுதல்

அறிவு - மெய்ம்மையை உணர்வது

அனுமித்து - அனுமானித்து; உத்தேசித்து: கருதி

ஆகம் - மார்பு

ஆங்க - அசைச்சொல்; பொருள்தாராது இசைபட வருஞ்சொல்

137

172

 

115

116

117

81

88.89

105

120

44

122

33

15

44

48

ஆசாரம்-ஒழுக்கம்; இயல்பு

ஆபதம்-ஆபத்து; கெடுதல்

ஆயம்-தோழிப் பெண்கள் கூட்டம்

ஆரணங்கு-நிறைந்த அழகு

ஆரிடம்-எண்வகை மணத்தில் ஒன்று

ஆரிருள்-மிக்க இருட்டு; நள்ளிருட்போது

ஆர்ப்பெடுத்து-ஆரவாரித்து; பெருங்குரல் இட்டு

ஆவிசென்றால்-உயிர்போனால்

ஆள்வினை-ஆட்சித்திறம்

ஆறலைத்தன-வழிப்பறிசெய்த பொருள்கள்

ஆறு - வழி

ஆற்றல் - வலிமை

இகத்தல் - இறத்தல்; கடத்தல்

இடம் தலைப்பாடு- இடத்திற்சந்தித்தல்

இடைச்சுரம்-பாலைநில வழியிடம்: இது சொல்நிலைமாறிய

இலக்கணப் போலி  

இணைவிழைச்சு-இருவர் காமத்தாலாம் சேர்க்கை

இயற்பழித்தல்-தலைவன் தன்மையைப் பழித்துக் கூறல்

71

160

29,59.141

47

25.26

110

8

55

160

21

143

160

114

57

 

125

9

135