தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாரத சக்தி மகாகாவியம்

  • பாடம் - 2

    A01142 பாரத சக்தி மகாகாவியம்

    E     


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும் அற்ற உலகைப் படைக்கலாம் என்பதை இக்காப்பியம் காட்டுகிறது. போரும் பூசலுமற்ற சமுதாயத்தை உருவாக்குவதைத் தலையாய பணியாகக் கொண்டு சுத்தன் உழைப்பதை இக்காப்பியம் சுட்டுகிறது. நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையே நிகழும் போரில் நல்லவர்கள் வெற்றி பெறுவதையும் தீயவர்கள் திருந்துவதையும் இதில் காணலாம். சமயோகம் என்னும் தத்துவத்தின்வழி இறை உணர்வையும் ஆன்மிக ஆற்றலையும் பெறலாம். உலகம் பயனுற வாழும் வாழ்க்கைக்கு அடித்தளமாகச் சமயோகம் அமைவதையும் இதனால் அறியலாம்.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    பாரத நாட்டின் ஆன்மிக ஆற்றலை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட காப்பியம் இது என்று இனம் காண முடியும்.

    பொறாமை, ஆணவம், மோகம் முதலிய தீய பண்புகள் மாந்தர்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதை அறிய இயலும்.

    அவ்வாறே தூய்மையும் வாய்மையும் தொண்டுள்ளமும் மனிதநேயமும் பூண்ட நல்லவர்கள் இறையருளால் வெற்றி பெறுவார்கள் என்பதை அறியலாம்.

    தீயவர் அழிவதைவிடத் தீமை அழிந்து தீயவர் நல்லவராக மாறுதல் சிறப்புடைத்து என்பதை அறியலாம்

     நாத்திகத்தின் வீழ்ச்சியையும் ஆத்திகத்தின் எழுச்சியையும் இக்காப்பியம் புலப்படுத்துகிறது.

    ஆன்ம ஆற்றலை விளக்க வீரசிவாஜியின் வரலாறு முதல் மகாத்மா காந்தியின் வரலாறு வரையிலும் இக்காப்பியத்துள் பேசப்பட்டிருப்பதை அறியலாம்.

     பல சமயத் தலைவர்களின் வரலாறுகளும் தத்துவங்களும் இக்காப்பியத்தில் இடம் பெற்றிருப்பதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 10:58:33(இந்திய நேரம்)