Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்குரிய இடத்தை அறப் போராட்டத்தின் வழிப் பெற முயன்றதைக் காட்டுகிறது. காப்பியத் தலைவி பூங்கொடி தமிழ்ப் பணியைத் தலையாய பணியாகக் கொண்டு சமுதாயத் தொண்டாற்றுவதைச் சுட்டுகிறது. தமிழிசையின் தொன்மையைக் குறிப்பிடுகிறது. தமிழ்மொழி வளர்ப்பது தமிழரின் தலையாய கடமை என்றுரைக்கிறது. பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதைத் தமிழர் விரும்பவில்லை; தனித்தமிழைப் போற்றினர் என்று காட்டுகிறது. தமிழ்மொழியைச் செம்மொழியாக ஆட்சியாளர் அறிவிக்கவில்லையே என்ற உணர்வு ஆசிரியரிடம் இருப்பதைக் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழ்மொழி, தமிழர், தமிழர் பண்பாடு முதலியவற்றை
முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட காப்பியம்
இது என்று
இனம் காண முடியும்.
தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் இசை வளர்ச்சி இவற்றில்
ஈடுபாடு கொண்டவர்களை
அறிந்துகொள்ள இயலும்.
தமிழ்மொழிப் பற்றை மூச்சாகக்
கொண்ட பூங்கொடி
என்னும் பெண், தாய்மொழி வளர்ச்சிக்காகத்
தன்னலம்
துறந்ததை
விளக்க முடியும்.
தமிழ்மொழியின் சிறப்பைக் காட்ட நாயன்மார்,
ஆழ்வார் ஆகியோர் பற்றிய
செய்திகள் இடம்
பெற்றிருப்பதை
விளக்க இயலும்.
தமிழை ஆட்சிமொழியாக,
அறிவியல்
மொழியாக,
உயர்தனிச் செம்மொழியாக
ஆக்க வேண்டும்
என்ற நோக்கத்தோடு இந்நூல் படைக்கப்பட்டதை
எடுத்துரைக்க இயலும்.