Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தொன்மை வாய்ந்த தமிழ்மொழி காலந்தோறும் இடம்பெறும் கருத்து வளர்ச்சியைத் தன்வயப்படுத்திக் கொண்டு வளர்கிறது. வான்மீகியின் இராமாயணத்தில் இடம் பெற்ற அகலிகை வரலாறு இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களின் கண்ணோட்டத்தில் புத்தாக்கம் பெற்றுள்ளது. பெண்ணிற்கு உரியதாகக் கூறப்பெறும் கற்புப் பற்றிய கண்ணோட்டமும் இக்காப்பியங்களில் பேசப்படுகிறது. கற்பிழந்த பெண்ணிற்குப் பரிவு காட்ட வேண்டியதையும் கோடிட்டுக் காட்டுகிறது. மற்றொரு குறுங்காப்பியமாகிய ‘வீராயி’யில் தமிழ்ச் சாதியில் புரையோடிப் போயிருக்கும் சாதியக் கட்டுமானத்திற்கு எதிரான குரலைக் கேட்கலாம்.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்திய இதிகாசத்தில் இடம்பெற்ற
கருப்பொருள் ஒன்று
தமிழ்க்
கவிஞர்களின் கற்பனை
வண்ணத்தில்
புதுக்கோலம்
புனைவதைக் கண்டு மகிழலாம்.
சாதியச் சழக்குகளால் உண்மையான
காதலர்கள் வாழ
முடியாமல் சாவுக்கு
இரையாகின்றனர்;
சமுதாயத்தின்
சிந்தனை மாற்றம் இன்றைய தேவை
என்பதை
அறியலாம்.
போராட்டம்தான் வாழ்க்கை,
போராடியே வெற்றி பெற
முடியும் என்பதை அகலிகை
வாழ்க்கையால் அறியலாம்.
கற்பைப் பற்றிய கவிஞர்களின்
கண்ணோட்டத்தை
அறியலாம்.