Primary tabs
-
2.3 எண்
பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எண் எனப்படும். எண் இரண்டு வகைப்படும். அவை,
1) ஒருமை
2) பன்மைஏதேனும் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை எனப்படும். பொருள்களைக் குறிக்கும் பிரிவுகளில் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் மூன்றும் ஒருமைக்குரிய பால்கள் ஆகும்.
முருகன், வளவன், அவன்-ஆண்பால்வள்ளி, குழலி, அவள்-பெண்பால்மாடு, கல், அது-ஒன்றன்பால்பொருள்களில் பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். பொருள்களைக் குறிக்கும் பிரிவுகளில் பலர் பால், பலவின் பால் என்னும் இரண்டும் பன்மைக்குரிய பால்கள் ஆகும்.
அவர்கள், ஆண்கள், பெண்கள்-பலர்பால்அவை, மாடுகள்-பலவின்பால்