தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A02114-4. பொதுப்பெயர்கள்

  • பாடம் - 4

    A02114 பொதுப்பெயர்கள்

     
    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பொதுப் பெயர்கள் பற்றிய விளக்கத்தைக் கூறுகிறது. பால்பகா அஃறிணைப் பெயர்கள், பொதுப்பெயர்கள் இவற்றைத் தெரிவிக்கிறது. இருதிணைப் பொதுப்பெயர்கள் பால் பொதுப் பெயர்களாக வரும் இயல்பினை உணர்த்துகிறது. பொதுப் பெயர்களின் வகைகளாக வருவனவற்றை எடுத்துக் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளுக்கும் பொதுவாக வரும் பொதுப் பெயர்களைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

    • பால்பகா அஃறிணைப் பெயர்கள், ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொதுப் பெயராய் வரும் இயல்பினை எடுத்துக் காட்டுவதை அறியலாம்.

    • பொதுப்பெயர்களின் வகைகளைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்தப் பாடம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:50:33(இந்திய நேரம்)