Primary tabs
பாடம் 2
A02122 தன்மை வினைமுற்றுகள்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?பேசுவோரைக் குறிக்கும் வினைமுற்றுகளே தன்மை வினைமுற்றுகள் என அறியலாம்.
தன்மை வினைமுற்றுகளில் ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவை பால் உணர்த்தா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
வினைமுற்றுகளில் ‘தன்மை’ என்பதை உணர்த்துவன விகுதிகளே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
பழங்காலத்தில் சில தன்மை வினைமுற்று விகுதிகள் ஒருமை, பன்மை என்பவற்றோடு காலமும் உணர்த்தின என்பதை உணரலாம்.