தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A02121 வினைச்சொல்லின் பொது இலக்கணம்

  • பாடம் 1

    A02121  வினைச்சொல்லின் பொது இலக்கணம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    எது வினைச்சொல் என்பதை விளக்குகிறது. காலம் உணர்த்துதல் என்னும் கருத்தின் அடிப்படையில் வினைச் சொல் இருவகைப்படும் என வரையறுக்கிறது. முற்று, எச்சம் என வினைச்சொல் இருவகைப்படும் என்பதைச் சுட்டுகிறது.

    வினைமுற்றில் விகுதிதான் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்துகிறது என்பதை விளக்குகிறது. வினை வகைகளை அறிவிக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • வினைச்சொல் எது என அறியலாம்.

    • தெரிநிலைவினை, குறிப்புவினை என்பன பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • வினைகளில் முற்று, எச்சம் என இருவகைகள் இருப்பதை உணரலாம்.

    • வினைகளில் திணை, பால் முதலியவற்றை அறிவிப்பன விகுதிகள் என்று அறியலாம்.

    • வினை வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:54:15(இந்திய நேரம்)