தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-A02123 முன்னிலை வினைமுற்றுகள்

 • பாடம் 3

  A02123 முன்னிலை வினைமுற்றுகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  முன்னிலை வினைமுற்று பற்றி அறிவிக்கிறது. முன்னிலை வினைமுற்றுகளில் ஒருமை பன்மைக்குத் தனித்தனி விகுதிகள் உள்ளன என்பதைச் சுட்டுகிறது. தெரிநிலை, குறிப்பு ஆகிய இருவகை வினைமுற்றுகளுக்கும் பொதுவாக விகுதிகளில் மாற்றம் இல்லை என்பதைத் தெரிவிக்கிறது. ஏவல் வினை பற்றிப் புலப்படுத்துகிறது. வியங்கோள் வினை பற்றி விவரிக்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • ஐ, ஆய், இ ஆகியன முன்னிலை ஒருமைக்குரிய விகுதிகளாக வினைமுற்றுச் சொற்களில் இடம்பெறுகின்றன என்பதை அறியலாம்.

  • இர், ஈர் என்னும் இரண்டும் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் எனத் தெரியலாம்.

  • ‘மின்’ என்பது முன்னிலைப் பன்மையில் ஏவல் பொருளில் பயன்படுகிறது என்பதை உணரலாம்.

  • க, ய என்பன வியங்கோள் வினைமுற்று விகுதிகளாகப் பயன்படுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.

  • ‘ர்’ என்பது யகரத்தோடு சேர்ந்து வியங்கோள் வினையில் வருவதையும் அறிந்து கொள்ளலாம்.

  பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:56:16(இந்திய நேரம்)