தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.4 தொகுப்புரை
     

    இப்பாடம், வினா என்றால் என்ன என்பதையும் வினாத் தொடர்களின் வகைகளையும் விளக்குகிறது.

    வினாவிற்கு ஏற்றவாறு பதில் அளிப்பது விடையாகும். இப்பாடல் விடை என்பதன் வேறு பெயரான இறை என்பதையும் அதன் வகைகளையும் விவரிக்கிறது.

    பேச்சு அல்லது உரைநடை வடிவங்களில் உள்ள சொற்களை வரிசை மாறாமல் கொள்வதே முறையாகும். ஆனால் செய்யுளில் அவ்வாறு பொருள் கொள்ள யாப்பிலக்கணம் முதலிய காரணங்கள் வாய்ப்பளிப்பதில்லை. இந்நிலையில் செய்யுளைப் பொருள் கொள்ளும் முறையைப் பொருள்கோள் என்னும் பகுதி உணர்த்துகிறது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1)
    விடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    2)
    செவ்வன் இறை யாவை?
    3)
    இறைபயப்பன யாவை?
    4)
    சுட்டுவிடை என்றால் என்ன?
    5)
    மறைவிடை என்றால் என்ன?
    6)
    ஏவல்விடை என்றால் என்ன?
    7)
    உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன?
    8)
    பொருள்கோள் என்றால் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:11:24(இந்திய நேரம்)