Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
பூதத்தாழ்வார் என்ற பெயர் அமையக் காரணம் யாது?
வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்தது பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்.