தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் : II

    5. உயர்ந்த பண்புகள், தீய பண்புகள் - இவற்றைப் பட்டியல் இடுக.

    மனிதர்கள் முகம் மலர்ந்து இன்சொல் பேசுவதே சிறந்த பண்பாகும். தாமரை மலர் போன்று முகம் மலர்ந்து மரியாதையோடு இனிமையான சொல்லைச் சொல்லிப் பேசுதல் வேண்டும். தினை அளவு ஒருவருக்குச் செய்த உதவியானது பனை அளவாய்ப் பெரியதாகித் தோன்றும். தண்டலையார் வளநாட்டில் உப்பிட்டவர்களை உயிர் உள்ளவரையும் மக்கள் நினைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

    சிறியோர் பண்பு

    மனித குலத்தை அழித்துவிடும் தீய பண்புகள் சிலவற்றையும் புலவர் விவரித்துள்ளார். ஐயம் இல்லாமல் கற்றாலும் கேட்டாலும் உறுதிப் பொருளைச் சொன்னாலும் உலகில் சிறியோர் அடங்கி நடந்து நற்கதி அடையமாட்டார்கள். கங்கை நதிக் கரையில் படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காயாக ஆகாதே என்று சிறியோர் இயல்பு கூறப்பட்டுள்ளது.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:36:21(இந்திய நேரம்)