தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- - மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - I

 • பாடம் - 1

  C02141 மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - I

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  மொழிக்கு இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் எவை என்பதைக் குறிப்பிடுகிறது. நிலைமொழியின் இறுதியில் நிற்கும் எல்லா மெய்யெழுத்துகள் முன்னரும் உயிர் வந்து புணர்வது பற்றி நன்னூலார் கூறும் பொதுவிதிகளை விளக்கிச் சொல்கிறது.

  நிலைமொழியின் இறுதியில் நிற்கும் ணகர, னகர மெய்கள், வருமொழி முதலில் வரும் வல்லின, மெல்லின, இடையின மெய்களோடு அல்வழி, வேற்றுமை என்னும் இரு பொருளிலும் புணரும்போது அடைகின்ற மாற்றங்கள் பற்றி நன்னூலார் கூறும் சிறப்பு விதிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்கிறது.

   

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல், வருமொழி முதலில் உள்ள உயிர் வந்து கூடி, உயிர்மெய்யாக மாறுவதை அறிந்து கொள்ளலாம்.
  • நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து நிற்கும் மெய், வருமொழி முதலில் உயிர் வரும்போது  இரட்டிப்பதை அறிந்து கொள்ளலாம்.
  • பேச்சுத் தமிழில் தனிக்குறிலை அடுத்து மெய்யைக்  கொண்டு முடியும் ஓரசைச் சொற்கள் உகர உயிர் சேர்த்து உச்சரிக்கப்படுவதையும், அப்போது அம்மெய்யானது இரட்டிப்பதையும் அறிந்துகொள்ளலாம்.
  • வேற்றுமையில் ணகரத்தின் முன் வரும் வல்லினம் டகரமாகவும், னகரத்தின் முன் வரும் வல்லினம் றகரமாகவும் திரிதலை அறிந்து கொள்ளலாம்.
  • தேன் என்னும் சொல்லின் முன்னர் வல்லினம், மெல்லினம் இடையினம் என்னும் மூவினமெய்களும் வந்து புணரும் முறை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:06:42(இந்திய நேரம்)