தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - II

 • பாடம் - 2

  C02142 மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - II

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  மகர மெய்யை இறுதியில் கொண்ட சொற்கள் நிலைமொழியில் நின்று, உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் நாற்கணங்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு வேற்றுமை, அல்வழி ஆகிய இருபொருளிலும் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறும் பொது விதியையும், சிறப்பு விதிகளையும் விளக்கிச் சொல்கிறது.

  ய, ர, ழ என்னும் மெய்களை இறுதியில் கொண்ட சொற்கள், வல்லினத்தை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு அல்வழி, வேற்றுமை ஆகிய இருபொருளிலும் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறும் விதிகளை விளக்கிச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மகர ஈற்றுச் சொற்கள் புணர்ச்சியில் ஈற்றில் உள்ள மகரமெய் கெட்டு, உயிர் ஈறு போல நின்று வருமொழிகளோடு புணரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • அகம் என்ற சொல் செவி, கை என்னும் வருமொழிகளுடன் புணரும்போது இடையில் உள்ள க என்னும் உயிர்மெய் கெடுவதை அறிந்துகொள்ளலாம்
  • ய, ர, ழ என்னும் மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்களின் முன் வருமொழி முதலில் வருகின்ற வல்லினம் அல்வழியில் இயல்பாதலையும், வேற்றுமையில் மிகுதலையும்,  விகற்பமாதலையும் அறிந்து கொள்ளலாம்.
  • கீழ் என்ற சொல்லின் முன்னர் வரும் வல்லினம் மிகுந்தும் வரலாம், மிகாமல் இயல்பாகவும் வரலாம் என்று கூறப்படும் நெகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:08:00(இந்திய நேரம்)