தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- உருபு புணர்ச்சி - I

 • பாடம் - 4

  C02144 உருபு புணர்ச்சி - I

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகக் கொண்ட வேற்றுமை உருபுகள் நிலைமொழி, வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சியை விளக்கிச் சொல்கிறது. பதத்தோடு விகுதியும், பதமும், வேற்றுமை உருபுகளும் புணரும் மூவகைப் புணர்ச்சியில் சாரியைகள் வரும் முறைமையை விளக்கிச் சொல்கிறது. மூவகைப் புணர்ச்சியில் வரும் சாரியைகள் எவை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • உருபு புணர்ச்சி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • எட்டு வேற்றுமைகளும் உருபுகளே என்ற நன்னூலார் கருத்தை விளங்கிக் கொள்ளலாம்.
  • எட்டு வேற்றுமை உருபுகளும் நாற்பது ஆதலை அறிந்துகொள்ளலாம்.
  • வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும்போது, உயிர்ஈற்று, மெய்ஈற்றுப் புணரியல்களில் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட விதிகளைப் பெறும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • சாரியை என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
  • சாரியை வரும் முறைமையைத் தெரிந்துகொள்ளலாம்.
  • புணர்ச்சியில் வரும் சாரியைகளை அறிந்துகொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:10:18(இந்திய நேரம்)