தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-உருபு புணர்ச்சி - II

 • பாடம் - 5

  C02145 உருபு புணர்ச்சி - II

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்னும் பெயர்கள், தான், தாம் முதலான மூவிடப் பெயர்கள், ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள், அவ், அஃது முதலான சுட்டுப்பெயர்கள் ஆகியவை வேற்றுமை உருபுகளோடு புணரும்போது இடையே சாரியைகள் வரும் முறைமையை விளக்கிச் சொல்கிறது. உயிர் ஈற்றுப் புணர்ச்சி, மெய் ஈற்றுப் புணர்ச்சி ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வேற்றுமைக்குக் கூறப்பட்ட சில பொதுவிதிகளினின்று இரண்டாம் வேற்றுமை மாறுபட்டு அமைவதைக் குறிப்பிட்டு விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்னும் பன்மைப் பெயர்களோடு வேற்றுமை உருபுகள் புணரும்போது சாரியை எங்கு வரும், முற்றும்மை எங்கு வரும் என்பனவற்றை அறிந்து கொள்ளலாம்.
  • தான், தாம், நாம் முதலான மூவிடப்பெயர்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும்போது தம் நெடுமுதல் குறுகி அமைவதை அறிந்து கொள்ளலாம்.
  • வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்களும், ஆய்தம் இடையே வந்த சுட்டுப் பெயர்களும் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது சாரியை பெறுதலை அறிந்து கொள்ளலாம்.
  • இரண்டாம் வேற்றுமை வேற்றுமைப் புணர்ச்சிக்கு விதிக்கப்பட்ட பொதுவிதிகள் சிலவற்றினின்று மாறுபட்டு அமைவதை விளங்கிக் கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:11:40(இந்திய நேரம்)