தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழியும் பண்பாடும்

  • பாடம் - 2

    C03112. மொழியும் பண்பாடும்

    இந்தப் பாடம் என்ன சொல்லுகிறது?

    c03110ad.gif (1294 bytes)

    மனிதன், தனது கருத்தை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த ஒப்பற்ற கருவி மொழி. அந்த மொழி எவ்வாறு ஒரு பண்பாட்டுக் கூறாகத் திகழ்கிறது என்பது பற்றிய கருத்துகள் இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன.

    தமிழில் உள்ள ஓர் எழுத்து ஒரு சொல், அடைமொழி, பழமொழி, விடுகதை முதலியன எவ்வாறு தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன என்பது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன.

    தமிழ் இலக்கண வழக்கில் ஒன்று தகுதி வழக்கு. தகுதி வழக்கில் இடம் பெற்றுள்ள இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி ஆகியவை வாயிலாக வெளிப்படும் தமிழர் பண்பாடும் இந்தப் பாடத்தில் கூறப்படுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • மொழியின் தன்மையையும் பயன்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

    • தமிழ் மொழியின் தனிச் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

    • தமிழ்ச் சொற்களும் - தமிழிலுள்ள சொல்லாக்கமும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்பதையும் அறியலாம்.

    • தமிழில் வழங்கப்படும் பழமொழிகளும், விடுகதைகளும் எவ்வாறு தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்துவனவாகக் காட்சி அளிக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    • தமிழ் இலக்கண வழக்கில் பயன்படுத்தப்படும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி போன்றவைகள் எத்தகைய பண்பாட்டு உணர்வை வெளிப்படுத்துகின்றன என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:34:18(இந்திய நேரம்)