தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்

 • பாடம் - 5


  C03115 தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்


  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  c03110ad.gif (1294 bytes)

  தமிழர்களின் புகழ், வீரம், மானம், விருந்தோம்பல், ஈகை, பொதுநலம் ஆகியவை எவ்வாறு தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படைகளாக அமைந்துள்ளன என்பது இந்தப் பாடத்தில் கூறப்படுகிறது.

  தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சியில் ஆண்கள், பெண்கள், சான்றோர் ஆகியோர் பங்களிப்புப் பற்றியும் விரித்துரைக்கப்படுகிறது.

  நல்லிணக்கம், மனிதநேயம், உயிரிரக்கம் போன்ற நல்ல இயல்புகளைச் சமயங்கள் மக்களிடையே பரப்பின. இவை தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தன. இவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் இடம் பெற்றுள்ளன.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  தமிழர் பண்பாடு மிக்கவர், நாகரிக உணர்வுக்காக நண்பர் கொடுக்கும் நஞ்சையும் ஏற்றுக் கொள்வர். இவ்வளவு உயர்ந்த மக்கள் போற்றிப் பேணிய பண்பாட்டின் அடிப்படைகளை இப்பாடத்தில் விவரிக்க முயல்கிறோம்.

  இப்பாடத்தை நீங்கள் முறையே கற்றுத் தேர்ந்தால் கீழ்க்காணும் திறன்/பயன்களைப் பெறுவீர்கள்.

  • புகழ், வீரம், மானம், விருந்தோம்பல், ஈகை, ஒப்புரவு, பொதுநலம் பேணுதல் ஆகிய பண்புகள் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படைகளாக அமைந்திருப்பதைச் சான்றுகளுடன் விளக்குதல்.

  • ஆண், பெண், சான்றோர் ஆகிய சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் பண்பாட்டைப் பேணும் முயற்சியில் ஆற்ற வேண்டிய பங்களிப்புகளாகத் தமிழ் இலக்கியம் வகுத்திருக்கும் இலக்கணத்தைக் கூறல்.

  • காதற்பண்பாட்டில் தமிழர் போற்றிய சிறப்பு இயல்புகளை விளக்குதல் (கற்பு, களவு, அம்பல், அலர்தூற்றுதல், உடன்போக்கு ஆகிய நிலைகளை விளக்குதல்).

  • சமயப் பண்பாட்டின் அடிப்படையாக மனிதநேயம், உயிரிரக்கம், நல்லிணக்கம் போன்ற உயரிய பண்புகள் விளங்குவதை விவரித்தல்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:39:12(இந்திய நேரம்)