தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.6 தொகுப்புரை

 • 5.6 தொகுப்புரை

  இதுவரை இந்தப் பாடம் கூறிய கருத்துகளை நினைத்துப் பார்ப்போமா? தமிழர் பண்பாட்டில் சில போற்றத்தக்க அடிப்படைகள் உள்ளன. புகழை அவர்கள் விரும்புவர். அதற்காக உயிரையும் கொடுப்பர். மானத்தை எந்த நிலையிலும் எதற்காகவும் இழக்க மாட்டார்கள். மானம் போகக்கூடிய நிலை வந்தால் உயிரை விட்டுவிடுவர். போரிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் வீரம் அவர்களுடைய பண்பாகும். விருந்தோம்பல், பிறர்க்கு உதவி செய்தல், பொருள் மிகுதியாக இருக்கும் நிலையில் அளவில்லாமல் பிறர்க்கு வழங்குதல், எல்லா உயிரிடத்தும் இரக்கம் பாராட்டுதல், மனிதர் யாவரையும் சமமாக மதித்துப் போற்றுதல் ஆகிய பிறபண்புகள் அன்றைய மக்களிடம் இருந்தன. இப்பண்புடையோர் சான்றோர் எனப் பெற்றனர். இவையே இப்பாடத்தின் வழியாக நாம் அறிந்தன அல்லவா?

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1. தமிழர் பண்பாட்டில் கணவன் மனைவி உறவு எத்தகைய நம்பிக்கையைக் கொண்டது?

  2. அலர்தூற்றுதல் என்பது யாது?

  3. பழந்தமிழர் திருமணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் யாவை?

  4. பாரதிதாசன் குடும்ப விளக்கு என்று யாரைக் குறிப்பிடுகின்றார்?

  5. தமிழர் சமய நல்லிணக்கம் உடையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  6. தமிழர் உயிரிரக்கம் உடையவர் என்பதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:39:36(இந்திய நேரம்)