தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்

 • பாடம் - 3

  C03113  தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  c03110ad.gif (1294 bytes)

  தமிழ்நாடு இயற்கை வளம் மிகுந்த ஒரு நாடு. இது, நிலத்தின் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப மலைசார்ந்த இடம், காட்டைச் சார்ந்த இடம், வயலைச் சார்ந்த இடம், கடலைச் சார்ந்த இடம், வறண்ட பாலைவனம் போன்ற இடம் என்ற ஐந்து நிலப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த ஐந்து வகையான நிலப் பாகுபாட்டிற்கு ஏற்ப, தமிழர்கள் நிலம் சார்ந்த தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலக்கியங்களையும் அவற்றின் அடிப்படையிலேயே படைத்தனர். இவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன.

  தமிழ் இலக்கியங்கள், அகழ்வாய்வுகள், கல்வெட்டுகள், அயலகப் பயணிகள் குறித்துள்ள செய்திகள் ஆகியவை தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று மூலங்களாகத் திகழ்வதை இப்பாடம் எடுத்துரைக்கிறது.

  கோயில்கள் பண்பாட்டு மையங்களாக அமைந்திருப்பதையும் இந்தப் பாடம் கூறுகிறது.  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ்நாட்டின் நிலஅமைப்பு, நிலம் சார்ந்த தமிழர் வாழ்வுமுறை
  • தமிழக வரலாற்றுச் சுருக்கம்
  • தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று மூலங்கள் மற்றும் பண்பாட்டு மையங்கள்

  ஆகியவை பற்றிய தகவல்களை இப்பாடத்தைப் படிப்பதன் மூலம் பெறலாம்

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:36:10(இந்திய நேரம்)