தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பண்பாடு - ஒரு விளக்கம்

 • பாடம் - 1

  C03111  பண்பாடு - ஒரு விளக்கம்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  c03110ad.gif (1294 bytes)

  பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியும், அதன் வாயில்கள் எவை என்பவை பற்றியும் இந்தப் பாடத்தில் முதலில் சுட்டப்படுகிறது.

  பின்னர், ஒருவன் உண்ணும் உணவு, உண்ணும் முறை, அணியும் ஆடை, அடிப்படைத் தேவைகளான உறைவிடம் போன்றவை எவ்வாறு ஒருவனது பண்பாட்டை வெளியிடுகின்றன என்பவை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன.

  ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு எனப்படும். வண்ணங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்ப் பெண்கள் அணியும் தாலியும், மெட்டியும் சூடிக் கொள்ளும் பூவும் குறியீடுகள். இவை வெளிப்படுத்தும் பண்பாடு பற்றியும் இந்தப் பாடம் கூறுகிறது.

  அக உணர்வுகள் வெளிப்படுத்தும் புறப்பண்பாடு பற்றியும், சமுதாய மாற்றங்களினால் பாதிக்கப்படாத தனித்தன்மை வாய்ந்த பண்பாடுகள் பற்றியும் கூறப்படுகின்றன.

  பண்பாடு மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதுவும் இந்தப் பாடத்தில் இடம் பெற்றுள்ளது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பண்பாடு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  • பண்பாடு எத்தனை வகைகளைக் கொண்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

  • உலகு போற்றும் பண்பாடு, நாடு போற்றும் பண்பாடு, சமூகப் பண்பாடு என்பவை எவ்வாறு உருவாகின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம்.

  • பண்பாட்டு மாற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

  • உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். எவை எவை பண்பாட்டுக் கூறுகள் என்பனவற்றை அடையாளம் காட்டும் ஆற்றலையும் பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:32:55(இந்திய நேரம்)