தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்

 • பாடம் - 4

  C03114 பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  c03110ad.gif (1294 bytes)

  ஒரு பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, மாற்றங்கள், பெருமைகள், சிறுமைகள் என அனைத்தையும் கால வரிசைப்படுத்தித் தருவது பண்பாட்டு வரலாறு ஆகும். பழம் பெருமை வாய்ந்த ஒரு பண்பாட்டின் வரலாற்றை எழுத உதவுபவை அதன் மொழி, இலக்கியம், கலை, போன்றவை கொடுக்கும் குறிப்புகளே. அகழ்வாராய்ச்சிகள், பண்டைய கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவற்றின் வாயிலாகக் கிடைக்கும் செய்திகளும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க உதவும். தமிழர் பண்பாட்டு வரலாற்றை உருக்கொடுக்க உதவும் சான்றுகளைப் பற்றி இப்பாடம் விரித்துரைக்க முயல்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பண்பாட்டு வரலாற்றை அறிந்து கொள்வதற்கு எவை எவை சான்றுகளாக அமையும் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

  • இலக்கியங்கள் பண்பாட்டின் பிரதிபலிப்புகளாக உதவுவதை அறிந்து கொள்வீர்கள்.

  • மக்களை மகிழ்விக்கும் கலைகளும் பண்பாட்டுக் கூறுகளைப் புலப்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள்.

  • அகழ்வாராய்ச்சிகளின் வாயிலாகவும் பண்பாட்டு வரலாற்றினை மீள் உருவாக்கம் செய்ய இயலும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

  • பண்டைய கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகியவையும் பண்பாட்டு வரலாற்றை நிலைப்படுத்த உதவும் சான்றுகள் என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:37:37(இந்திய நேரம்)